0
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது “அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்” இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, நாளை சபரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை நிலவக்கூடும்.
அதிகரித்து வரும் இந்த வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி,
அதிகளவு நீர் அருந்துதல் மற்றும் நிழலான இடங்களில் தங்கியிருத்தல்.
வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான ஆடைகளை அணிதல்.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்துதல்.
இயன்றவரை கடுமையான வெளிவேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல்.