• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

நாளை முடிவடைய உள்ள இரான் போர் நிறுத்தம் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல் என்ன?

Byadmin

Apr 21, 2026


டிரம்ப் புதிய அச்சுறுத்தல் - இரான் பேச்சுவர்த்தைக்கு வருமா?

பட மூலாதாரம், Reuters

இரான் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புவதைத் தவிர இரானுக்கு வேறு வழியில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி-க்கு அளித்த நேர்காணலில், அமெரிக்கா இறுதியில் “ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும்” என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஒன்றும் “மிகவும் இனிமையானவர்களுடன் பேசிக் கொண்டிருக்கவில்லை” ஆனால் அதை “வெற்றிகரமாகச்” செய்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கக் கடற்படை முற்றுகையை “பிரம்மாண்டமான வெற்றி” என்றும் அவர் அழைத்தார்.

By admin