• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

நிக்கி ஹேலி: இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தவருக்கு ஆட்சியில் இடம் இல்லை என டிரம்ப் அறிவித்தது ஏன்?

Byadmin

Nov 11, 2024


நிக்கி ஹேலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிக்கி ஹேலி இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தனது புதிய அரசாங்கத்தில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோரை சேர்க்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

நிக்கி ஹேலியின் பெற்றோர் அஜித் சிங் ரந்தாவா மற்றும் ராஜ் கவுர் ரந்தாவா இந்திய வம்சாவளியினர். பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள்.

நிக்கி ஹேலி இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார். மைக் பாம்பியோவும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஆனால், இருவரையும் தனது அரசாங்கத்தில் சேர்க்கப் போவதில்லை என என டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

” முன்னாள் தூதர் நிக்கி ஹேலி அல்லது முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை அடுத்த அரசாங்கத்தில் சேர்க்கப்போவதில்லை’’ என்று டிரம்ப் சமூக ஊடக தளமான ‘ட்ரூத்’ இல் பதிவிட்டுள்ளார்.

By admin