• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

நிதிஷ் குமார் வெறும் 3 மாதங்களில் பிகார் முதல்வர் பதவியை விட்டு விலகுவதன் அரசியல் கணக்கு என்ன?

Byadmin

Mar 6, 2026


முதல்வர் நிதிஷ்-துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துணை முதல்வர் சாம்ராட்சௌத்ரி, முதல்வர் நிதிஷ் குமாருடன்.

’25 முதல் 30 வரை மீண்டும் நிதிஷ்’ – இந்த முழக்கத்துடன், பிகாரில் 2025 சட்டசபை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொண்டது.

இந்தக் கூட்டணி பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பிகார் அரசியலின் மையமாக விளங்கும் நிதிஷ் குமார், பதவியேற்று 105 நாட்களே ஆன நிலையில், தற்போது ராஜ்ய சபாவிற்குச் செல்லத் தயாராகி வருகிறார்.

அவரது இந்த முடிவு பலரை, குறிப்பாக அவரது கட்சித் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு பெரிய முடிவு திடீரென்று எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து அவரது கட்சித் தொண்டர்களிடையே கோபம், அதிருப்தி மற்றும் ஆழ்ந்த குழப்பம் நிலவுகிறது.

By admin