• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு | Case filed against tvk administrators for violating conditions

Byadmin

Sep 22, 2025


நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர்.

விஜய் பேசிய இடத்துக்கு அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீதும் ஏராளமான தொண்டர்கள் ஏறி அமர்ந்ததால், அது பாரம் தாங்காமல் சரிந்து கீழே விழுந்தது. மேலும், சுவரில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகளும் சாய்ந்தன. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில், நிபந்தனைகளை மீறி, தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமார், துணைச் செயலாளர் நரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நாகையில் தவெக தொண்டர்கள் அதிக அளவில் ஏறி அமர்ந்ததால் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்த மாதா திருமண மண்டப சுற்றுச்சுவர்.



By admin