• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

நியூசிலாந்தில் நவம்பர் 7ஆம் திகதி பொதுத்தேர்தல்: பிரதமர் அறிவிப்பு

Byadmin

Jan 22, 2026


நியூசிலாந்தில் இவ்வாண்டு நவம்பர் 7ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (21) நடத்திய விசேட ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலில், நிலையான அரசாங்கத்தை தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்படுகின்றது என்றும் பிரதமர் கூறினார் .

55 வயதான லக்சன், குறுகிய காலத்தில் அரசியல் களத்தில் உச்சத்தை தொட்டவர். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்த அவர், 2021இல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2023இல் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மை உயர்வு காரணமாக, மக்களிடையேயான அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்யும் வகையில் தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நியூசிலாந்தில் நவம்பர் 7ஆம் திகதி பொதுத்தேர்தல்: பிரதமர் அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin