0
அமெரிக்கா – மேற்கு நியூயார்க் அதிவேக நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என நியூயார்க் பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
பஃபலோ நகருக்கு கிழக்கே 30 மைல் (48 கிமீ) தொலைவில் உள்ள பெம்ப்ரோக் நகருக்கு அருகில் உள்ள விபத்து நடந்த இடத்திற்கு அம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ ஹெலிகாப்டர்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.