• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இந்தியா வென்றது

Byadmin

Nov 5, 2026


ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது இரண்டு தடவைகள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டு தடவைகள் தடைப்பட்டது.

முதல் தடவையாக ஆட்டம் தடைப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இரவு 8.54 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு 40 ஓவர்களில் 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்தியா 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மீண்டும் மழை பெய்ததால் இரவு 9.10 மணிக்கு மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. (இந்தியா 64 – 1 விக்.)

30 நிமிட தடைக்குப் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 32 ஓவர்களில் 143 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 22.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

அதனைத் தொடர்ந்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் சரிந்தன. ஆனால், இறுதியில் இந்தியா இலகுவாக வெற்றியீட்டியது.

விராத் கோஹ்லி 74 ஓட்டங்ளையும் அணித் தலைவர் ஷுப்மான் கில் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஜேக்கப் டஃபி (15 ஆ.இ.), ப்ளயா டிக்னர் (34) ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த 39 ஓட்டங்களே நியூஸிலாந்து இன்னிங்ஸில் பதிவான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

அவர்களை விட டிம் சீஃபேர்ட் 38 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 30 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 70 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குர்நூர் ப்ரார் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்ஷுல் கம்போஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அன்ஷுல் கம்போஜ்

விசேட நினைவுச் சின்னங்கள்

இப் போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து ஆல் ப்ளக்ஸ் றக்பி விற்பன்னர் கெவன் மீலாமு, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராத கோஹ்லி, அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகியோருக்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஜேர்சிகளை நினைவுச் சின்னங்களாக வழங்கி கௌரவித்தார்.

By admin