• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களில் கருப்பு, வெள்ளையாக தெரிவது ஏன்? நிலவின் உண்மையான நிறம் என்ன?

Byadmin

Nov 4, 2025


இஸ்ரோ, நிலவு, நிலா, கருப்பு - வெள்ளை

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, ஆகஸ்ட் 23, 2023 அன்று கிடைமட்ட வேகம் அறியும் கருப்பு-வெள்ளை கேமரா எடுத்த படத்தில் நிலவின் தரைபரப்பு சாம்பல் நிறத்தில் உள்ளது. வர்ணங்கள் எங்கே?

பிரக்யான் ஊர்திக்கலம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் நிலவின் தரைப்பரப்பு கருப்பு வெள்ளையாக உள்ளது. அதே போல விக்ரம் தரையிறங்கி கலத்தில் உள்ள இடர் உணர் ஆபத்து தவிர் கேமரா எடுத்த புகைப்படமும் கருப்பு வெள்ளையாக உள்ளது. இதற்குக் காரணம் அந்தக் கேமரா எல்லாம் மோனோகிரோம் எனும் கருப்பு வெள்ளை கேமராக்கள் தான்.

ஆனால் விக்ரமில் உள்ள தரையிறங்கி கேமரா எடுத்த படத்தில் ஊர்திக்கலம், ஊர்திக்கலம் தரையிறங்கிய சரிவுப்பாதை முதலியவற்றின் நிறங்கள் தென்படுகின்றன. அதாவது இது கலர் கேமரா. ஆயினும் இதிலும் நிலவின் தரைபரப்பு சாம்பல் நிறத்தில் உள்ளது.

நவீன டிஜிட்டல் யுகத்திலும் நிலவுக்குச் செல்லும் விண்கலத்தில் ஏன் கருப்பு வெள்ளை கேமரா எடுத்துச் செல்கிறார்கள். நிலவின் தரை பரப்பு சாம்பல் நிறத்தில் உள்ளது ஏன்?

விக்ரம் கலத்தில் இரண்டு இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள் உள்ளன. இது தவிர இருப்பிட நிலை கண்டுபிடிக்கும் கேமரா, கிடைமட்ட வேகம் அறியும் கேமரா உள்ளன. மேலும் ஊர்திக்கலத்தின் முன்னே இரண்டு கண்கள்போல இரண்டு வழித்தடம் அறிந்து செலுத்தும் கேமரா உள்ளன.

இவை அனைத்தும் கருப்பு வெள்ளை கேமரா. இந்த கேமராவிலிருந்து எடுக்கப்படும் படம் விக்ரம் மற்றும் ஊர்திக்கலனில் உள்ள செயற்கை நுண்ணறிவு செயலிக்கு கண்ணும் காதும் போல. சுற்றியுள்ள நிலைகளை அறிவித்து செயற்கை நுண்ணறிவு செயலி அந்த கலங்களை தானியங்கி முறையில் செலுத்தும்.



By admin