மலையாள நடிகர் நிவின் பாலி நயன்தாராவுடன் இணைந்து டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தமர் கேவி இயக்கத்தில் ‘டோல்பி தினேஷன்’ எனும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இத் திரைப்படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்ததோடு டான் வின்சண்ட் இசையமைக்கிறார்.
இப் படத்தில் நிவின் பாலி ஆட்டோ ட்ரைவராக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப் படத்தைத் தொடர்ந்து ஆக்சன் ஹீரோ பைஜூ 2, மலடிவெர்ஸ் மன்மதன், பேபி கேர்ள் போன்ற திரைப்படங்களிலும் நிவின் பாலி நடிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post நிவின் பாலியின் ‘டோல்பி தினேஷன்’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Vanakkam London.