• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள் ‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Byadmin

Sep 7, 2025


மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேபி கேர்ள்’ எனும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஓணம் திருநாளை முன்னிட்டு படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அருண் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ எனும் திரைப்படத்தில் நிவின் பாலி, லிஜோ மோல் ஜோஸ், சங்கீத பிரதாப், அபிமன்யு திலகன், அசீஸ் நெடுமங்காடு, அஷ்வத் லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

By admin