• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

நிஷாந்த் உயிர்த்த நாதன்: “கணவர் இறந்து 3 நாட்கள் ஆகிறது” – தமிழக மாலுமியின் மனைவி கூறுவது என்ன?

Byadmin

Jun 15, 2026


தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்

பட மூலாதாரம், @FSUIINDIA

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (35 வயது) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் கடந்த ஜூன் 11ஆம் தேதி மாலை நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்எஸ்யூஐ (FSUI) தெரிவித்துள்ளது.

நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததாலும், மூன்று நாட்களைக் கடந்துவிட்டதால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதாகவும், எக்ஸ் தளத்தில் எப்எஸ்யூஐ பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் எம்டி செலஸ்டியல் கப்பலின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நிஷாந்த் இறந்தது குறித்து கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை எனக்கூறும் நிஷாந்தின் குடும்பத்தினர், ‘உடலை மீட்டுக்கொடுப்பது மட்டுமின்றி, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

’14 வருடங்களாக கப்பல் பணி’

தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்
படக்குறிப்பு, நிஷாந்த் உயிர்த்தநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் தனது 21ஆம் வயது முதலே கப்பல் பணியில் ஈடுபட்டு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

By admin