• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

நிஹான் ஹிடான்கியோ: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்த அமைப்பு என்ன சாதித்தது?

Byadmin

Oct 11, 2024


ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு
படக்குறிப்பு, நிஹான் ஹிடான்கியோ அமைப்பின் இணைத் தலைவர் தோஷியுகி மிமாக்கி

ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களின் குழுவான நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு, 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதை அங்கீகரிக்கும் விதமாக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

அவர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

“மோதல்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற ஒருமித்த கருத்து உருவானதில் இந்த அமைப்பு பெரும்பங்கு வகித்தது”, என்று நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் கூறினார்.

By admin