• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

நீங்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? நீர்ச்சத்து குறைவாகவும் அளவுக்கு அதிகமாகவும் இருப்பதை எப்படி அறிவது?

Byadmin

Apr 21, 2025


நீர் பருகுதல், நீர், தண்ணீர், எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

நீர் உயிர்வாழ மிகவும் அவசியமான ஒன்று. பல்வேறு சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள், நாள் ஒன்றுக்கு பெண் என்றால் இரண்டு லிட்டர் தண்ணீரும், ஆண் என்றால் 2.5 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றன.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள், சில காரணிகளைப் பொறுத்தே நம்முடைய தேவை உள்ளது என்று கூறுகின்றனர்.

தேவைக்குக் குறைவாக தண்ணீர் அருந்தினால் நீரிழப்புக்கு ஆளாவோம். ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

நம்முடைய உடல் எடையில் 60% எடை நீரால் ஆனது. அது நம்முடைய செல்கள், உடல் உறுப்புகள், இரத்தம் மற்றும் பல்வேறு உடலியக்கப் பாதைகளில் இடம் பெற்றுள்ளது.

By admin