புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் நடவடிக்கை சட்டவிரோதமானது.
குடியரசுத் தலைவரது இந்த நடவடிக்கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக அறிவிக்க வேண்டும் அல்லது நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநரின் செயலர் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.