• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

நீதித் துறையை விமர்சித்த விவகாரம்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு | High Court orders registration of case against Seeman

Byadmin

Aug 21, 2025


சென்னை: நீ​தித் துறையை விமர்​சி்த்து பேசி​ய​தாக, சீமானுக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகார் மீது, வழக்​குப் பதிவு செய்து சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்​தாண்டு நவம்​பரில் யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரான சீமான், நீதித்​துறையை​யும், நீதி​மன்ற செயல்​பாடு​களை​யும் விமர்​சித்​துப் பேசி​ய​தாக​வும், எனவே, அவர் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி, வழக்​கறிஞர் சார்​லஸ் அலெக்​ஸாண்​டர் என்​பவர் சென்னை எழும்​பூர் பெருநகர குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை எழும்​பூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்த நிலை​யில், அந்த உத்தரவை ரத்து செய்து சீமானுக்கு எதி​ராக வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விடக்​கோரி, சார்​லஸ் அலெக்​ஸாண்​டர் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில், சீமான் ஒரு அரசி​யல் கட்​சி​யின் தலை​வர் என்ற முறை​யில் கண்​ணி​ய​மாக​வும், நாகரீக​மாக​வும் பேசி​யிருக்க வேண்​டும்.

ஆனால், நீதித்​துறை தொடர்​பான அவரது பேச்சு அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு விரோத​மாக இருப்​ப​தால், அவர் மீது சட்ட ரீதி​யாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும், என வாதிடப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரரின் புகார் தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து சட்ட ரீதி​யாக நடவடிக்கை எடுக்க உத்​தர​வி்ட்​டுள்​ளார்.



By admin