• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர் | Tn Home Secretary appears in contempt of court case

Byadmin

Nov 13, 2025


சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் 2 பேர் பணிக்கு சேர​வில்லை என்​ப​தால் அந்த இடத்​தில் தங்​களை நியமிக்​கக் கோரி மானுவேல் அரசு மற்​றும் ராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் இரு​வரை​யும் அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது. அதன்​படி இரு​வரும் கடந்த 2007-ம் ஆண்டு அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், தங்​களை தொகுப்​பூ​திய ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்த்​ததை எதிர்த்து இரு​வரும் மீண்​டும் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் அவர்​களை பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்​கு​மாறு கடந்த 2024-ம் ஆண்டு உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை அமல்​படுத்​த​வில்லை என்று கூறி இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிபதி இளந்​திரையன், தமிழக உள்​துறை செயல​ரான மூத்த ஐஏஎஸ் அதி​காரி தீரஜ்கு​மார் நேரில் ஆஜராக உத்​தர​விட்​டிருந்​தார். அதன்​படி இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் ஆஜரா​னார். இதையடுத்து நீதிப​தி, வழக்கு வி​சா​ரணையை டிச.10-ம் தேதிக்​கு தள்​ளிவைத்​தார்​.



By admin