0
இலங்கை – தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று புதன்கிழமை (15) இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் – தரங்கணி சினிமா அரங்கில் நடைபெற உள்ளது.
யாழ். மண்ணில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் சர்வதேச விருது பெற்ற இலங்கை இயக்குநர் தேவிந்த கோங்காகே அவர்கள்.
இத்திரைப்படத்தில் நான் எழுதிய “போய் வாரேன் உயிரே” என்ற பாடலை Zee Tamil Title Winner கில்மிஷா பாடியுள்ளார். இப்பாடல், அவர் தமிழ் திரைப்படத்தில் பாடிய முதல் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.