• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் தங்கச் சுரங்கம் இருந்ததா? தற்போது அங்கு நடப்பது என்ன?

Byadmin

Feb 19, 2026


நீலகிரி, தங்கச்சுரங்கம், தங்கம், வரலாறு

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

”காலையில் ஏழெட்டு மணிக்கு குழி வேலைக்குப் போனால் சாயங்காலம்தான் திரும்ப முடியும். குழிக்குள் இறங்கி மண்ணை மூட்டை கட்டி கயிறுகள் வழியே மேலே கொண்டு வருவோம். அதைச் சலித்துப் பிரித்து, பாதரசத்தை வைத்து சுத்தம் செய்து, தங்கத்துகள்களைச் சேகரிப்போம். சில நாட்கள் 200 ரூபாய் கிடைக்கும். அபூர்வமாக ஒரு சில நாட்களில் 1000 ரூபாய் கிடைக்கும். சில நாட்களில் ஒன்றுமே கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருக்கும். இப்போது அந்த வேலைக்கும் போக முடியவில்லை!”

பந்தலூரைச் சேர்ந்த தொழிலாளர் முத்தமிழ், பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.

”இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. கேரளாவில் கட்டட வேலை, விவசாய வேலைக்குச் செல்வார்கள். எஸ்டேட் வேலையும் இப்போது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனால் வேறு வழியின்றி, யானை, சிறுத்தை, புலி நிறைந்த காட்டுக்குள்தான் இந்த வேலைக்குப் போகின்றனர். முன்பு ஆங்கிலேயர் தோண்டி வைத்த குழிகளில்தான் மண் எடுப்போம்.” என்று கூறுகிறார் புவனேஸ்வரன்.

முன்பு இந்த வேலைக்குச் சென்ற இவர், இப்போது வேறு வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பந்தலூர் நகராட்சி கவுன்சிலராக இருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தங்கச்சுரங்கம் செயல்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதற்காக குழி தோண்டுவது சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்த நிலையில், காட்டிமட்டம் என்ற பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குழிகளையும், அதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் வனத்துறையினர் எரித்து அழித்துள்ளனர்.

By admin