• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

நீலகிரி: பழங்குடி கிராமங்களுக்கு மருத்துவ சேவையாற்றும் ஆஷா பணியாளர்களுடன் ஒரு நாள் – பிபிசி கள ஆய்வு

Byadmin

Mar 8, 2025


ஆஷா பணியாளர்கள், நீலகிரி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC

”முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை நிற்பதே தெரியாது. யானைகளிடமிருந்து நான் இரு முறை தப்பியிருக்கிறேன்!”

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா ஊழியரான சிவகாமியின் வார்த்தைகள்தான் இவை.

”நான் அடிக்கடி நடந்து செல்லும் கோழித்துறை பழங்குடி கிராமப் பாதையில்தான், கடந்த மாதத்தில் ஒரு யானை தாக்கி, பழங்குடி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதே பாதையில்தான் பல நாட்களில் நான் தனியாக நடந்து செல்கிறேன்.”

இது குஞ்சப்பனை ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா ஊழியரான கவிதாவின் அனுபவ பகிர்வு.

By admin