ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கும் வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் என நான்கு அமைச்சுகளுக்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவும், பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post நீள்கிறதா அமைச்சர்கள் பட்டியல்? | பதில் அமைச்சர்களாக நால்வர் நியமனம் appeared first on Vanakkam London.