• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

நெப்ட் டேஷ்லரி: சோவியத் ஒன்றியம் உருவாக்கிய இந்த ஏழு கப்பல்களின் தீவில் என்ன இருக்கிறது?

Byadmin

Nov 12, 2024


சோவியத் ஒன்றியம், நெப்ட் டேஷ்லரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம்

காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம்.

1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது.

அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தின் படி இந்த நகரம், கடலில் அமைந்துள்ள மிகப் பழமையான எண்ணெய் உற்பத்தி இடமாக அறியப்படுகிறது. இந்த நகரின் பெயரை ரஷ்ய மொழி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “எண்ணெய் பாறைகள்” என்றும் பொருள் தருகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 29-வது காலநிலை மாற்ற மாநாடு (COP29), பாகு நகரில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

By admin