• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது | Nellai Honour KIlling Case: SI Saravanan, father of Surjith arrested

Byadmin

Jul 31, 2025


திருநெல்வேலி: நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று, கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்​டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகிய இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இருப்பினும், இருவரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வகணேஷின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித், குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் நெல்லை மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



re_save_container addtoany_content addtoany_content_bottom">

By admin