• Fri. Dec 5th, 2025

24×7 Live News

Apdin News

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 

Byadmin

Dec 5, 2025


இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும், இந்த வழக்கில் எனக்கு இல்லை.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து சுமார் 98 நாட்கள் சிறையில் இருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

By admin