சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி: தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ஆம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீஃப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.
மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ. 3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை) 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.