• Fri. Feb 6th, 2026

24×7 Live News

Apdin News

நேரடி மோதல் குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.

Byadmin

Feb 6, 2026


ஸ்டீவ் விட்காஃப் - அப்பாஸ் அரக்சி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் (இடது) தலைமையில் செயல்படுவார்கள், இரானிய குழு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையில் செயல்படும்.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள ஒரு நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க மற்றும் இரானிய மூத்த அதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தைக்காக விரைவில் ஓமனில் சந்திக்க உள்ளனர்.

கடந்த மாதம் இரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களை அந்நாட்டு அரசு வன்முறை மூலம் ஒடுக்கியதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவத்தைக் குவித்ததைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த ஒடுக்குமுறையில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் அதன் நோக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக, இந்த சந்திப்புகள் தடைபடலாம் என்ற சூழல் ஏற்பட்டது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பிராந்திய மத்தியஸ்தர்களால் மேற்கொள்ளப்படும் தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்தைகள் நடைபெறுகின்றன.

இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளில் முற்றிலும் மாறுபட்டுள்ளன. ஒருவேளை இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தால், அது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு வடிவமைப்பை உருவாக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது.

By admin