• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

நேரலை: டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி – பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?

Byadmin

Aug 18, 2025


அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி (கோப்புப்படம்)

அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த நிலையில், இன்று டிரம்ப், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கவுள்ளார். டிரம்ப்-புதின் சந்திப்பில் கிட்டத்தட்ட மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும், ரஷ்யா-யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்நிலையில், டிரம்புடனான சந்திப்புக்காக ஜெலன்ஸ்கி வாஷிங்டனுக்கு செல்கிறார். முன்னதாக, யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்கள், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்திப்பதற்கு முன்பான புதினின் “இழிவான நடவடிக்கை” என ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

ஒடேசாவில் ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த வீடு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒடேசாவில் ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த வீடு

“ஒரு பக்கம் பேச்சுவார்த்தை ,மறு பக்கம் தாக்குதல்”

வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், யுக்ரேனின் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடருவதாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,” போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கூட்டம் இன்று வாஷிங்டனில் நடைபெறுவதை அறிந்திருந்த போதும், இன்று காலை கார்கிவ், ஜபோரிஷியா, சுமி மற்றும் ஒடேசா பகுதிகளை ரஷ்யா தாக்கியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

By admin