0
நோபல் அமைதிப் பரிசு பெற்ற ஒருவர் அந்தப் பரிசை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது என்று நோபல் பரிசுக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. பரிசுக் குழுவின் முடிவு இறுதியானதும் நிரந்தரமானதுமாகும் எனவும் அது தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசை அவர் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புக்கு மாற்றிக் கொடுக்க விரும்புவதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த நோபல் பரிசுக் கழகம், அமைதிப் பரிசு எப்போதும் அதை பெற்றவருக்கே சொந்தமானது என்று விளக்கமளித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா மச்சாடோவுக்கு; டிரம்ப்க்கு ஏமாற்றம்!
மேலும், பரிசு பெற்றவரின் தனிப்பட்ட கருத்துகள் அல்லது நடவடிக்கைகள் குறித்து நோபல் குழு கருத்துத் தெரிவிப்பதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மச்சாடோ நோபல் பரிசை விட்டுக்கொடுத்தால் அதை பெறுவது பெருமை என டிரம்ப் முன்னதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.