• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

நோபல் பரிசுத் தொகை எவ்வளவு? பதக்கத்தில் என்ன இருக்கும்? சுவாரஸ்ய தகவல்கள்

Byadmin

Oct 8, 2024


நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

அக்டோபர் 7-ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃப்ரட் நோபல் நிறுவிய இந்தப் பரிசுகள், உலக அளவில், அறிவியல், அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் தலைசிறந்த பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நவீன உலகின் வரலாற்றில் பல முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள், பல முக்கிய அமைதி ஒப்பந்தங்கள், தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைச் செய்தவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, அலெக்சாண்டர் ஃப்ளெமிங் ஆகியோர் நோபல் பரிசுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சில பிரபலமான பெயர்கள்.

இந்தப் பரிசைப் பற்றியும் அதனைப் பெற்றவர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே.



By admin