2
வேண்டுமென்றே சுமார் 30 நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட செய்ததாக பிரான்ஸ் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை வழக்கு விசாரணை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
மேற்படி நோயாளிகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
53 வயதுடைய பிரடெரிக் பெச்சியர் என்பவர், மயக்க மருந்து அளிக்கும் மருத்துவராக இரு மருந்தகங்களில் பணியாற்றியுள்ளார்.
2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை குறித்த இரு மருந்தகங்களிலும் நோயாளிகளுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் தமது உயிர்ப்பிக்கும் திறன்களை வெளிக்காட்டுவதற்காகவும் சக ஊழியர்களை அவமானப்படுத்துவதற்காகவும் நோயாளிகளுக்கு வேண்டுமென்றே மாரடைப்பு ஏற்படச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அதிக அபாயம் இல்லாத நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு விசாரணை தொடங்கியது. குறித்த விசாரணை 8 ஆண்டுகள் நீடித்தது.
இந்நிலையில், பெச்சியர், சக ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்த மருந்துப் பைகளில் குளறுபடி செய்ததாக நம்பப்படுகிறது. அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.