• Wed. Sep 17th, 2025

24×7 Live News

Apdin News

நோய் பாதிப்பை மனித உடலின் வாசனை மூலம் கண்டறிவது எப்படி? விஞ்ஞானிகள் புதிய முயற்சி

Byadmin

Sep 17, 2025


மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

நமது சருமத்தில் உள்ள நுண்துளைகள் மற்றும் மூச்சுக்காற்று மூலம் பல்வேறு வேதிப்பொருட்களை நாம் வெளியிடுகிறோம். இவற்றில் சில நாம் நோய்வாய்ப்படவிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நோய்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியவும் இவை பயன்படுத்தப்படலாம்.

“இது முற்றிலும் முட்டாள்தனம்.”

பார்கின்சன் நோயை முகர்ந்து கண்டறியும் திறன் தனக்கு இருப்பதாக ஒரு ஸ்காட்லாந்துப் பெண்மணி கூறியதைப் பற்றி உடன் பணிபுரியும் ஒருவர் கூறிய போது, பகுப்பாய்வு வேதியியலாளர் பெர்டிடா பாரன் இப்படித்தான் எதிர்வினையாற்றினார்.

“அவர் வயதானவர்களின் வாசனையை முகர்ந்து, பார்கின்சன் நோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, ஏதோ ஒன்றை தொடர்புபடுத்தியிருக்கலாம்” என்று நினைத்ததாக பாரன் நினைவு கூர்ந்தார். ஜாய் மில்னே என்ற 74 வயதான ஓய்வுபெற்ற செவிலியர், 2012-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி திலோ குனாத் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது அவரை அணுகினார்.

By admin