• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

நோர்ப்ளின்: இந்திய அரண்மனைகளில் இந்து கடவுள்களை பிரமாண்டமாக வரைந்த போலந்து கலைஞர் என்ன ஆனார்?

Byadmin

Oct 6, 2024


ஸ்டெஃபான் நோர்ப்ளின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோர்ப்ளின் இந்தியாவில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார், அந்த நேரத்தில் அவர் பல சுவரோவியங்களை வரைந்தார்

1939 ஆம் ஆண்டு..

ஜெர்மன் டாங்கிகள் மற்றும் வீரர்கள் போலந்து மீது படையெடுத்த போது, ​​​ பிரபல போலந்து கலைஞர் ஸ்டெஃபான் நோர்ப்ளின் மற்றும் திரைத்துறையை சேர்ந்த அவரது மனைவி லீனா ஆகியோர் தங்கள் நகைகளை அடகு வைத்து நாட்டை விட்டு வெளியேறினர்.

ஸ்டெஃபான் நோர்ப்ளினும் லீனாவும் தங்களுடைய கனவு இல்லத்தை விட்டுச் சென்றனர். பாதுகாப்பிற்காக அவர்களின் முழு கலை மரபுகளையும் அங்கு விட்டுச் சென்றனர்.

போலந்தில் இருந்து தப்பி சென்ற இந்த ஜோடி, அமெரிக்காவில் தஞ்சம் அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், ருமேனியா, துருக்கி மற்றும் இராக் முழுவதும் பயணம் செய்து, இறுதியாக காலனித்துவ இந்தியாவிற்கு வந்து, அங்கு அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை வாழ்ந்தனர்.

By admin