கார்த்திகை மாதத்தில்
இருபத்தோராம் நாள்
மாவீரர் வாரம் ஆரம்பம்.
களமாடியவர் நினைவுகளோடு.
காடேறிய காவலர்
காத்திருந்து தடுப்பார்.
எதிரியின் வரவை
ஊருக்குள் விடாதே!
ஊமையாக இருப்பதாய்
பலர் பேசிடும் போது
உடலால் சூழலறிந்து
எதிரி நகர்வை அறிவார்.
பாம்புக்கும் – காட்டு
விலங்குக்கும் – அவர்கள்
நட்பு பாராட்டி விட்டு
தாமும் காட்டோடு கலப்பார்.
வரியுடை அணிந்த மேனி
வாடிய போதும் பசியால்
நாடியது இல்லை ஓய்வை.
விடியும் முன்னே பகை முடிக்கும்.
பகை வீடு புகுந்து – அவர்
நெடுந்தூரம் நடந்து;
இலக்கை அடைந்து;
காத்திருப்பார் கட்டளைக்கு.
முடிவு எதுவென்று தெரிந்தும்
கட்டளை மதித்து இருந்து
காரியம் முடிந்து திரும்புவார்.
அவர்கள் தான் எம் வேங்கைகள்.
திறனறிந்து கொடுத்த வேலை
தேர்வதை வென்றிட வைக்கும்.
துயரதை நீக்கி விட்டு
மகிழ்வை தந்து நிற்கும்.
நதுநசி
The post பகை வீடு புகுந்து | நதுநசி appeared first on Vanakkam London.