• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

பக்கா சிஷ்டி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்த இந்திய கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

Byadmin

May 10, 2025


பக்கா சிஷ்டி, இந்தியா - பாகிஸ்தான்
படக்குறிப்பு, பிரேம் சிங் மற்றும் ஜீதோ பாய்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பக்கா சிஷ்டி என்ற கிராமத்தில் மாலை வேளையில் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.

அந்த கிராம குருத்வாராவின் (சீக்கியர் கோவில்) ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்ட ரெஹ்ராஸ் சாஹிப் எனும் சீக்கிய மாலைப் பிரார்த்தனையின் ஒலி அந்த அமைதியை உடைத்தது.

ஒருவித உதவியற்ற சூழல் அந்த பகுதியைச் சுற்றிலும் காணப்படுகின்றது.

கிராமத்தின் வெறிச்சோடிய தெருக்களிலும், காலியான வீடுகளிலும் அமர்ந்திருந்த முதியவர்களின் முகங்களில் ‘போர், இடப்பெயர்வு மற்றும் இழப்பு’ பற்றிய பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.

By admin