பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மீண்டும் மாணவர்கள் பாரிய பேரணியை முன்னெடுத்தனர்.
முன்னதாக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, ஓராண்டாகியும் இன்னமும் அரசியல் நிலைத்தன்மை கைகூடவில்லை.
நாட்டை மறுசீரமைக்க மாணவர்களின் புதிய அரசியல் கட்சி அழைப்பு விடுக்கிறது.
நாட்டின் இடைக்கால அரசாங்கம் சில ஜனநாயக மாற்றங்களை அறிவிக்கப் போவதாக கூறுகிறது.
இந்நிலையிலேயே தலைநகர் டாக்காவில் மாணவர்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.
பங்களாதேஷில் கடந்த 2024 ஆண்டு நடந்த மிக மோசமான அரசியல் கலவரத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டுத் தப்பித்து, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இன்றுடன் (05) அவர் இந்தியா சென்று ஓராண்டாகியது.
ஹசினா பதவி விலகக் காரணமாக இருந்த மாணவர்கள் அப்போது அமைத்த தேசிய குடியுரிமைக் கட்சியின் சுமார் ஆயிரம் ஆதரவாளர்கள் மேற்படி பேரணியில் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் 24 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஹசினா மீது வழக்கு விசாரணை தொடங்கியிருக்கிறது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தத் ஹசினா முயன்றதாகவும் குற்றங்களுக்கு அவரே மூலகாரணம் என்றும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. படுகொலைகளைத் தடுக்கத் தவறியது அதில் ஒரு குற்றச்சாட்டு ஆகும்.
The post பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் பேரணி! appeared first on Vanakkam London.