• Sun. Jan 26th, 2025

24×7 Live News

Apdin News

பங்குனி ஆமை: நூற்றுக்கணக்கில் செத்து கரை ஒதுங்கும் மீனவர்களின் ‘குட்டியம்மா’ சாமி – என்ன பிரச்னை

Byadmin

Jan 25, 2025


ஆலிவ் ரிட்லி ஆமைகள், பங்குனி ஆமைகள், சென்னை கடற்கரை

பட மூலாதாரம், Nishanth Ravi

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

பங்குனி ஆமைகள் அல்லது ஆலிவ் ரிட்லி என்ற ஆமை இனங்கள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வருகின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள நீரில் இனப்பெருக்கம் செய்யும் இந்த ஆமைகள், முட்டைகளை இடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கிட்டத்தட்ட 350 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு இந்த ஆமைகள், கடற்கரையை நோக்கி வரும்போது மரணங்கள் நிகழ்வது உண்டு. ஆனால், இந்தாண்டு இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.



By admin