• Sat. Dec 21st, 2024

24×7 Live News

Apdin News

பசறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Byadmin

Dec 21, 2024


பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கும் பசறை பால் சபைக்கும் இடையே வீதியோரமாக மேற்படி சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் பாதணிகளும், பை ஒன்றும் அதற்கு அருகாமையில் பை ஒன்றில் 4 யோகட் கோப்பைகளும் காணப்படுகின்றன.

மேற்படி நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post பசறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! appeared first on Vanakkam London.

By admin