• Sun. Dec 22nd, 2024

24×7 Live News

Apdin News

பசிபிக் தீவு: இந்தியா டூ ஹவாய் – இந்த தீவுக்குக் குடிபெயர்ந்த முதல் குடும்பம் பெரும் பணக்காரர்களானது எப்படி?

Byadmin

Dec 22, 2024


ஹவாயில் ஒரு வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய இந்திய குடும்பம்

பட மூலாதாரம், Flickr/East-West Center

படக்குறிப்பு, குலாப் வாடுமுல்லின் (இடது) தந்தை ஜமந்தாஸ் 1915இல் ஹொனலுலுவில் தனது குடும்ப வணிகத்தை ஒரே ஒரு கடையில் இருந்து தொடங்கினார்.

  • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
  • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த 1915-ஆம் ஆண்டில், 29 வயதான இந்திய தொழிலதிபர் ஜமந்தாஸ் வாடுமுல், தனது பங்குதாரர் தரம்தாஸுடன் இறக்குமதி தொழிலில் தனது சில்லறை விற்பனைக் கடையை அமைப்பதற்காக ஹவாயின் ஒஹாஹு தீவுக்கு சென்றார்.

இருவரும் ஹொனலுலு ஹோட்டல் தெருவில் வாடுமுல் & தரம்தாஸ் என்ற பெயரில் தொழிலை தொடங்கினர். அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு, தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் மற்றும் பிற வித்தியாசமான அரிய பொருட்களை அங்கு விற்பனை செய்தனர்.

கடந்த 1916- ஆம் ஆண்டில் காலரா நோயால் தரம்தாஸ் இறந்தார். இதனால் ஜமந்தாஸ் , தனது சகோதரர் கோபிந்த்ரம் என்பவரை ஹொனலுலு கடையை நிர்வகிப்பதற்காக அழைத்து வந்தார்.

ஜமந்தாஸ் அப்போது மணிலாவில் இருந்த அவர்களின் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அடுத்த பல ஆண்டுகள், அந்த சகோதரர்கள் இந்தியா, ஹவாய் இடையே பயணம் செய்து, தங்கள் வியாபாரத்தை உறுதியாக வளர்க்கத் தொடங்கினர்.

By admin