கார்த்திகை வந்து
கதை சொல்லும்
காலம் வருகிறது
இன்னும் சில நாளில்.
மெல்ல சினுங்கும்
கார்த்திகை மழைக்கு
செங்காந்தாள் பூக்கும்
சூடியதை போற்றிடலாம்.
ஈழத் தமிழன் என்று
பெருமிதம் நின் கொள்ள
வாய்ப்பு தந்திடும்
வருடத்தின் மாதமல்லவா?
விடுதலை வேள்வியில்
ஆகுதியாகிய வீரர்
தீரம் பேசி மகிழும்
நல்ல பொழுது தந்திடும்.
நாளெல்லாம் இனி
புத்துணர்ச்சி பொங்கும்.
பசி ஓடி மறையும்.
மாவீரர் நினைவுகள் மேலிட.
ஈழத் கனவோடு அவர்
விழி மூடி உறங்கிட
பார் வாழும் காலமெலாம்
துதி பாடி தொடர்ந்திடலாம்.
புரிவாயோ என்னை
எந்தன் மனமே!
நதுநசி
The post பசியோடியினி மறையும் | நதுநசி appeared first on Vanakkam London.