• Thu. Dec 5th, 2024

24×7 Live News

Apdin News

பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நாராயண் சிங் சௌதா யார்? பின்னணி என்ன?

Byadmin

Dec 4, 2024


பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – உயிர் தப்பியது எப்படி?

பட மூலாதாரம், ANI

பொற்கோவிலின் ஒரு நுழைவாயிலில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான, சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு எந்த பாதிப்புமும் இன்றி இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூட்டத்தில் இருந்துள்ளதாகவும், அவரைத் தாக்கி கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தியவர் சுக்பீர் பாதலுக்கு அருகில் இருந்ததாகவும்” பிபிசி பஞ்சாபி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் கூறினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளில், சுக்பீர் பாதல் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பொற்கோவிலுடைய தர்பார் சாஹிப் நுழைவாயிலுக்கு வெளியே சக்கர நாற்காலியில் அமர்ந்து வழிபாடு செய்து கொண்டிருந்ததைக் காணலாம். அந்த வழிபாட்டின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுக்பீர் பாதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்?

பிபிசி பஞ்சாபி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் பகிர்ந்துள்ள தகவலின்படி, “அமிர்தசரஸில் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாக”, அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் தெரிவித்துள்ளார்.

By admin