• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Byadmin

May 4, 2025


சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர்.

By admin