• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

பட்டங்கள், பதவிகளை கைவிட்டார் இளவரசர் ஆண்ட்ரூ : “மகிழ்ச்சி” என்றார் மன்னர் சார்லஸ்!

Byadmin

Oct 19, 2025


பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் சீனா உடனான தொடர்பு போன்ற விவகாரங்களால் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.

மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ, தாமாகவே முன்வந்து, பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தையும் கைவிட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்கு முடிவில், ஆண்ட்ரூ இந்த முடிவுக்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆண்ட்ரூ இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் ஆர்டர் ஆஃப் தி கார்டர் உட்பட தனது அனைத்துப் பட்டங்களையும் கைவிடுவதாக அறிவித்தார்.

இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடைய பட்டங்களை ஒப்படைத்ததில் “மகிழ்ச்சி” என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2078 வரையில் அவர் அரச குடும்பத்திற்கு சொந்தமான மாளிகையில் வசிப்பார் என்றே கூறப்படுகிறது.

1986 இல் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதியின் திருமண நாளில் அவர்களுக்கு டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் யார்க் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. தற்போது சாராவும் தமது டச்சஸ் பட்டத்தை இழக்க வேண்டியிருக்கும்.

Duke of York என ஆண்ட்ரூ இனி அறியப்பட்டாலும், அந்த பட்டத்தை அவர் இனி எங்கேயும் பயன்படுத்த முடியாது. சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் குடும்ப கொண்டாட்டங்களில் ஆண்ட்ரூ கலந்துகொள்ள மாட்டார்.

மன்னர் சார்லஸ் மற்றும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆண்ட்ரூ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

By admin