பணிப்பெண்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் கனடா முடங்கியுள்ளது.
ஏர் கனடா விமான போக்குவரத்து நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
அவர்கள் சம்பள உயர்வு மற்றும் விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் கடனாவில் இரத்துச் செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post பணிப்பெண்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் முடங்கியுள்ள ‘ஏர் கனடா’! appeared first on Vanakkam London.