சென்னை: பண்டிகைக்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 4,829 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி, தினசரி விற்பனையில் இருந்து பண்டிகை நாட்களில் சற்று கணிசமாக விற்பனை ஆதிகரிக்கும்.
அந்தவகையில் இந்தாண்டு வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்ந்து வருவதால் மதுபானங்களை கையிருப்பில் வைக்கவும், சுற்றுலா தலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகப்படியாக விற்பனையாகும் மதுபான வகைகளின் எண்ணிக்கையை கணிகசமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.