9
கள கட்டுதுப்பா கூட்டம், ஒரு கடைக்கு உள்ள போக முடியல யப்பா, என்ன கூட்டமா இருக்கு!. இன்னும் தீபாவளிக்கு நாள் இருக்கு இப்பவே இப்படியா இன்னும் போக போக அவ்வளவுதான் போலயே, கூட்டத்தை சமாளிக்க முடியாது சரிம்மா சீக்கிரமா கிளம்பு நம்மளும் போயிட்டு துணிமணி எடுத்துக்கிட்டு, வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கிட்டு வந்துருவோம், உடனே வீட்டில் உள்ளவர்கள் ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். உடனே வீட்டுக்கு குழந்தைகள் ஐ ஜாலி ஜாலி கடைக்கு போறோம். எப்ப போறோம், எங்க போறோம், உடனே வீட்டில் உள்ளவங்க நாளைக்கு போறோம். இப்ப சீக்கிரம் படுத்து தூங்குங்க சரியா, என ஒரு அரட்டு அரட்டி குழந்தைகளை தூங்க வைத்து விடுவார்கள்.
மறுநாள் காலையில் விடே பரபரப்பா இருக்கும், சீக்கிரம் கிளம்புங்க ஏன் இன்னுமுமா அவன் குளிக்கல சீக்கிரம் குளிக்க சொல்லுங்கப்பா, சீக்கிரம் போன தான் சீக்கிரம் வர முடியும், எல்லாரும் சாப்பிட்டாச்சுல என கேட்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் வருவார் ஏன் இன்னைக்கே கடைக்கு போறீங்க. அதான் இன்னும் பண்டிகைக்கு நாள் இருக்கே நாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் போலாம்னு இருக்கோம் நீங்க இன்னைக்கே போறீங்களாக்கும் போங்க போய் எப்படி விலை இருக்கு என்னென்ன இருக்குங்குறத நான் கேட்டுக்குறேன் என சொல்வார் பக்கத்து வீட்டுக்காரர்.
கடைக்கு செல்வதற்குள் கூட்ட நெரிசல் சிக்கி போதும்பா போதும் என்ற நிலையில் கடைகளுக்குள் சென்று பொருள்களை வாங்கி அது சரியில்ல இது சரியில்ல அந்த மாடல் வேணும் இந்த மாடல் வேணும் என சண்டையிட்டு அதற்கு பின் நம்மளே இருக்கட்டும் விடுங்க என திருப்தியாகி, கண்ணில் படும் பொருட்களை எல்லாம் குழந்தைகள் கேட்க ஒவ்வொன்றாக வாங்கி கொடுத்து கடைசியில் வீடு வரும்போது எப்பா ஒரு வழியா பொருள் வாங்கியாச்சு பெரிய நிம்மதி பா, என்ற ஒரு பரபரப்பான நிலை பண்டிகை காலங்களில் இருக்கும், கடை கடையாய் சென்று பிடித்த பொருட்களை வாங்கி அதும் குடும்பத்தினருடன் சென்று அது ஒரு தனி உணர்வு அதை சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் தெரியும், ஆனால் இன்று பண்டிகை காலங்களில் இவ்வாறு கடை கடையாய் சென்று பொருள்களை வாங்குவதற்கு மக்கள் விருப்பப்படுகின்றார்களா என்றால் கேள்விக்குறியே ஏன் இந்த நிலை இதைப் பற்றி சற்று கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
டிஜிட்டல் யுகம் :
ஒருவேளை உணவு கூட இல்லாமல் இருந்திரலாம் போல ஆனால் இணையம் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்கவே முடியாது என்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த அளவிற்கு இன்று இணையம் வாழ்வில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வருவதற்குள் போகும் போதும் என்று ஆகிவிடுகிறது. அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல், அதிகமாக உள்ளது இதனால் அலுவலகத்திற்கு சென்று திரும்புவது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது இப்படிப்பட்டவர்களால் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்குவது என்பது மிகப் சவாலானது. இதனால் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்காமல் ஆன்லைன் முறையில் பொருள்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் நிறுவனங்கள் பொருள்களை விற்கும் பாரம்பரிய முறையில் இருந்து மாரி மின்னணு முறையில் பொருள்களை விற்பனை செய்யும் முறைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறிவிட்டன.இவற்றில் இட கட்டுப்பாடுகள் இல்லை மேலும் அட்வான்ஸ் வாடகை கொடுத்து ஒரு கடைய ஆரம்பித்தாலும் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும் இதுவே ஆன்லைன் ஆன்லைன் ஸ்டோர்களில் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதிலும் கூட பொருள்களை விற்பனை செய்ய முடிகின்றது எனவே நேரம் மிச்சம் ஆகிறது பிரஷர் ஷாப்பிங் இல்லாமல் முக்கிய பண்டிகை விசேஷ நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் அதனால் ஏற்படும் சிரமம் தேவையற்ற அலைச்சல் போன்றவை அல்லாமல் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே ஷாப்பிங் செய்வது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆர்டர் செய்வது என்பது போன்ற பயன்பாட்டின் எளிமையே இந்த ஆன்லைன் ஷாப்பிங்கின் முக்கிய அம்சம்.
ஏற்றம் கண்ட ஆன்லைன் நிறுவனங்கள்:
என்னதான் சொல்லுங்க அந்த கடை கடையாய் குடும்பத்தோட ஏறி இறங்கி ஊருக்குள்ள வாங்குற சுகமே தனி சுகம் அதெல்லாம் சொன்னா புரியாது, இத சொன்னா யாரு கேக்குறா, காலம் மாறிப்போச்சு பா மனுஷங்களே மாறிட்டாங்க, மனுஷனுக்கு மனுஷன் பேசுறது இப்ப குறைஞ்சிடுச்சு இப்படி இருக்கிற காலத்துல மக்களோட மனசும் மாறிக்கொண்டே இருக்கு அதற்கு தகுந்தார் போல தொழில்நுட்பங்கள் நன்கு வளர்ந்துள்ளது. அதனால் அதனை சார்ந்த ஆன்லைன் வணிகமும் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கரக்பூர் பொருளாதாரப் பிரிவு சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது அதன்படி இன்னும் மூன்று ஆண்டுகளில் இ-காமர்ஸ் என்று சொல்லப்படுகின்ற ஆன்லைன் வர்த்தகம் மிக அதிகரிக்கும் என்கின்றது அந்த ஆய்வு. ஆம்நாம் அனைவரின் கைகளிலும் இன்று ஆறாவது விரலாய் ஸ்மார்ட் போன்கள் உள்ளன, இவைகள் நம் வாழ்வில் மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டன, இதனை நாம் தினசரி பயன்படுத்தும் போது நாம் எவற்றை பார்க்கிறோம், இணையதளத்தில் என்னவெல்லாம் பார்க்கின்றோம், நமக்கு என்னென்ன எல்லாம் தேவை என்பதை அறிந்து கொண்டு அதுவும் நம் மூலமே அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல ஆன்லைன் நிறுவனங்கள் நமது ஸ்மார்ட் போனில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.
எனவே ஆன்லைனில் சில்லறை விற்பனை என்பது தற்சமயம் அதிகரித்துள்ளது அதுவும் குறிப்பாக பண்டிகை மட்டும் விசேஷ காலங்களில் சிறப்பு சலுகைகள் தள்ளுபடிகள் எனக்கூறி பொருள்களை நமக்கு விற்பனை செய்கின்றன நம்மிடம் வாங்குவதற்கு பணமே இல்லை என்றாலும் கடன் சலுகைகளை அள்ளி வழங்கி பொதுமக்களிடம் பொருள்களை விற்பனை செய்து விடுகின்றன. அதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தற்போது 2024 வரை ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி மிக மிக அதிகரித்துள்ளது, குறிப்பாக சிறிய நகரங்களில் இருந்து பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது, அதும் குறிப்பாக மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், மொபைல் போன்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள் (அதுவும் குறிப்பாக பெண்களின் ஆடைகள் ) இவற்றின் விற்பனை கடைகளுக்கு சென்று வாங்குவதை காட்டிலும் ஆன்லைன் மூலம் வாங்குவது தற்காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறிய நகரங்களில் இருந்து பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது, அதும் குறிப்பாக மின்னணு சாதனங்கள், ஆடைகள் இவற்றின் விற்பனை கடைகளுக்கு சென்று வாங்குவதை காட்டிலும் ஆன்லைன் மூலம் வாங்குவது தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் குறைபாடுகள்:
என்னதான் ஆன்லைன் ஷாப்பிங் என எல்லாரும் சொன்னாலும் எனக்கு இன்னும் அதன் மேல நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்,அதற்கேற்றார் போல ஏகப்பட்ட குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது டெலிவரியில் ஏற்படும் காலதாமதம், பொருள்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பம் நாம் ஒன்றினை வாங்கினால் அதற்கு பதிலாக மற்றொரு பொருள் வருதல் மேலும் இதற்கென தனியாக அலுவலகங்களோ அல்லது பொருள்களைப் பற்றிய விளக்கம் அளிக்க போதுமான பிரதிநிதிகள் இல்லாதது அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் நொடிப்பொழுதில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான பணத்தினையும் செலுத்தி விட்டு கைக்கு வந்து சேர பல நாட்கள் ஆவது மேலும் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் தொடுதல் உணர்வு இல்லாமை தயாரிப்பின் தரம் குறித்த சந்தேகங்கள் விலைகள் குறித்த தெளிவான விவரங்கள் இல்லாமை இது போன்ற சில செயல்பாடுகளால் மக்களை யோசிக்க வைக்கிறது. இதற்கு நல்ல ஒரு உதாரணம் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அதற்கான பணத்தையும் அவர் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார் இரண்டு நாட்கள் கழித்து அவரின் முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது அதை பிரித்து பார்த்தபோது அவருக்கு பேர் அதிர்ச்சி ஆம் அவர் ஆர்டர் செய்த வாச்சுக்கு பதிலாக காய்ந்த மாட்டுச் சாணம் அதாவது வரட்டி இருந்துள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது சரியான முறையில் அவர்கள் பதிலளிக்கவில்லை இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இது இந்திய அளவில் இந்த சம்பவம் பெரும் பேசுபொருளானது இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும் பொழுது ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி எனக்கு ஞாபகம் வருகிறது நடிகர் செந்தில் அவர்கள் சித்ரகுத்தனாகவும் கவுண்டமணி அவர்கள் எமதர்மனாகவும் நடித்திருப்பார்கள் அதில் செந்தில் அவர்கள் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை அளிக்க செல்வார் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார் காவல் நிலையத்தில் பெட்டியில் என்ன என கேட்பார்கள் உடனே அவர் இதில் விலை உயர்ந்த தங்க நகைகள் இருப்பதாக கூறுவார் அவர்கள் திறந்து பார்க்கும் போது அதில் காய்ந்த மாட்டுச் சாணம் தான் இருக்கும் அதைப் பார்த்து அனைவரும் சிரித்து விடுவார்கள் இது உங்கள் ஊரில் நகையா என்று கேட்பார்கள் ஆம் என பதில் சொல்வார் இது நகையல்ல மாட்டுச் சாணம் வரட்டி எனக்கு கூறுவார்கள் இப்படி ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும் இந்த நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று தான் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் மீதான நம்பிக்கை சற்று குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
பொருள்களை தொட்டுணர்ந்து வாங்க நினைக்கும் மக்கள்:
ரத்தமும் சதையுமான ஆரோக்கியமான அன்றாட பழகுகின்ற மனிதர்களை பார்த்து அவர்களிடம் பேசி தரமான பொருட்களை வாங்கும் அனுபவம் ஆன்லைன் ஷாப்பிங்கில் வராது மேலும் இந்தியா போன்ற நாடுகளில் பொருள்களின் தரத்தை தொட்டு உணர்ந்து அதன் தரத்தினை சோதித்த பின் தான் வாங்கும் மனநிலையில் பெரும்பாலான மக்கள் உள்ளனர் அதற்காக தங்களின் நேரத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர் கடை கடையாய் ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்த பொருள் மற்றும் அதன் விலை அதன் தரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதன் பின் தான் பொருட்களை வாங்குகின்றனர்.
ஏனென்றால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது தான் இந்த ஆன்லைன் ஷாப்பிங் இது ஒரு வளர்ச்சியின் அறிகுறிகளாக பார்க்கப்பட்டாலும் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை மேலும் இதனால் சிறு வியாபாரிகளும் உள்நாட்டு வணிகமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 90 சதவீத சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பொருட்களை பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர், ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளால் இப்படிப்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர், நேரடியாக விற்பனை செய்யும் வணிகர்கள் அவர்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து அதற்கென்று தனியாக வாடகை கொடுத்து, அதற்கு விற்பனையாளர்கள் நியமித்து அவ்வளவு செலவு செய்து நேரடி வணிக நிறுவனங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் ஆன்லைன் நிறுவனங்கள் அவ்வாறு இல்லை.பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் நமது நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களாக இருப்பதில்லை அதனால் ஆம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் வருவாய் அனைத்தும் மற்ற நாடுகளுக்கு சென்று விடுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன,மேலும் உள்ளூர் வணிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாமல் நேரடியாக கடைகளில் பொருட்களை வாங்க வேண்டுமென உள்ளூர் வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.
உடனடித் தேவைகள்:
எது எப்படியோ நல்ல தரமான பொருட்களை குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு தந்தாலே அவர்களை கவர முடியும். குறிப்பாக தற்போது பண்டிகை கால விற்பனை சூடு பிடித்துள்ளது. அது ஆன்லைன் நிறுவனம் ஆனாலும் சரி நேரடி விற்பனை மையம் ஆனாலும் சரி ஒருவர் கூறுவர் போட்டி போட்டுக் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர் தற்போது உள்ள சூழலில் ஆரோக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகின்றது. அந்தந்த நிறுவனங்கள் தங்களை வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் தரமான பொருட்களை விற்பனை செய்து, யார் யாருக்கு என்னென்ன பொருள் எப்போதெல்லாம் தேவைப்படும் என்பதை நன்கு அறிந்து கொண்டு புதியவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிக்கின்றன இதில் எக்காரணம் கொண்டும் உள்நாட்டு வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தரமான பொருட்களை சரியான விலையில் விற்பனை செய்து விற்பனையில் புதுமையை புகுத்தி, புதிய தொழில் உத்திகளை கையாண்டு காலத்திற்கு ஏற்றால் போல் வணிகம் செய்தாலே எந்த சக்தியாலும் நமது வெற்றினை தடுக்க முடியாது இதுவே உண்மை.எனவே நாமும் சிந்திப்போம் செயல்படுவோம் இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.
ம.ஷெரின் பானு