• Sun. Oct 20th, 2024

24×7 Live News

Apdin News

பண்டிகை, திருமணம், வேலையிழப்புக்கும் காப்பீடு – இவற்றில் கிடைக்கும் பலன்கள் என்ன?

Byadmin

Oct 20, 2024


குறுகிய கால காப்பீடுகள்

பட மூலாதாரம், Getty Images

டெர்ம் இன்சூரன்ஸ் குறித்து நம் அனைவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். அதாவது, பாலிசிதாரர் இறந்துவிடும் சூழலில் அவரது குடும்பத்தினர் அல்லது அவரைச் சார்ந்திருப்போருக்கு பாதுகாப்பு வழங்க டெர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது.

அத்தகைய நீண்டகால காப்பீடுகளைத் தாண்டி, சமீப காலமாக சில குறுகிய கால காப்பீடு வகைகள் அறிமுகமாகி வருகின்றன.

உதாரணத்திற்கு, நாளை தீபாவளி பண்டிகை என வைத்துக்கொள்வோம். அதற்கு, 9 ரூபாய் பிரீமியத்தில் பட்டாசு காப்பீட்டை ஃபோன்பே செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கையில் காயம் ஏற்பட்டால், இந்தக் காப்பீடு மூலம் ரூ. 25,000 வரை பெற முடியும்.

ஆனால், இந்தக் காப்பீட்டின் கால அளவு 10 தினங்கள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பலன் பெற முடியும் வகையிலான காப்பீடுகள்தான் குறுகிய கால காப்பீடுகள்.

By admin