1
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தமது காதலி ஜோடி ஹேடனைத் (Jodie Haydon) திருமணம் செய்துள்ளார்.
இவ்வாண்டு நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி அமர்வுக்குப் பிறகு நேற்றுப் பிற்பகல் (29 ) கான்பராவில் (Canberra) திருமணம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பலரும் ஆல்பனீசியின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
உலகில் பதவியில் இருக்கும் போது திருமண பந்தத்தில் இணைந்த முதல் பிரதமராக ஆஸ்திரேலியப் பிரதமர் பெயர் பெற்றுள்ளார்.
ஆன்ட்டனி ஆல்பனீசியும் (62 வயது) காதலி ஹேடனும் கடந்தாண்டு காதலர் தினத்தின்போது நிச்சயம் செய்துகொண்டனர். தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தமது திருமணப் படங்களையும் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
புதுமணத் தம்பதி நாளை முதல் (01) ஆஸ்திரேலியாவில் 5 நாள் தேனிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.