• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

பதுங்குகுழியில் வெள்ளை புலிகள் | கேசுதன்

Byadmin

Nov 7, 2025




சிக்குண்ட பாறைநடுவே
வெடித்தஎரிமலை
குழம்பாற்றை போல்
என்தேச சந்ததியின்
குருதியுறைந்த மணல்
வெள்ளத்தே மிதித்து
கடந்த பீரங்கிகளும்
கொன்று குவித்த
தோட்டாக்களும்
பல வடிவங்களில்

அங்கே வெடித்து
சிதறிய குண்டுகள்
ஒட்டிய குருதியுடன்
பல் துண்டுகளாய்
செந்நிற மின்குமிழ்களாய்
ஒளிர்கிறது

உயிர்காக்க தோண்டிய
பதுங்குகுழியில் விளையாடிய
என் தம்பி தங்கை மீது
குண்டெறிந்து புதைகுழியாகியவன்
சொல்கிறான் கேளுங்கள்
வெள்ளை ஆடையோடு
உள்ளிருந்தவன் புலியென

கேசுதன்

The post பதுங்குகுழியில் வெள்ளை புலிகள் | கேசுதன் appeared first on Vanakkam London.

By admin