1
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலமை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.
சனிக்கிழமை (04) பெய்த கடும் மழையின் காரணமாக பசறை பகுதியில் 137.4 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பெல்காதன்ன பகுதியில் 134 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ஆறுகள், ஓடைகள் பெருக்கெடுத்ததுடன் பசறை வீதியின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.
கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தின் எல்ல, ஹாலிஎல, பதுளை, பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் முதற்கட்ட மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது.