• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

பனாமா: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் பனாமா கால்வாயை மீண்டும் கொண்டு வர டிரம்ப் விரும்புவது ஏன்?

Byadmin

Dec 23, 2024


பனாமா கால்வாய், அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கால்வாயை பயன்படுத்த பனாமா அதிக கட்டணம் வசூலிப்பதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாயைப் பயன்படுத்த கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என பனாமா நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான பனாமா, அமெரிக்க சரக்கு கப்பல்களுக்கு அதிக கட்டணங்களை வசூலிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, அரிசோனாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசுகையில், “பனாமா அமெரிக்காவிடம் தன்னிச்சையாக அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றது. நாங்கள் அதை உடனடியாக நிறுத்துவோம்.” என்றார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ளார். `டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற கன்சர்வேடிவ் குழுவில் உரையாற்றிய போது டிரம்ப் இவ்வாறு கூறினார்.

By admin